பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு – 3000 குடும்பங்கள் வெளியேற்றம்!
பிலிப்பைன்ஸின் அல்பே (Albay) மாகாணத்தில் அமைந்துள்ள மாயோன் எரிமலை வெடிப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 05 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை, தற்போது மூன்றாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் எரிமலையை அண்டிய பகுதிகளில் வாழும் சுமார் 3000 குடும்பங்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள பாறைகள் அவ்வவ்போது விழுவதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிமலையின் பள்ளத்திலிருந்து 6 கிலோமீட்டர் (3.7 மைல்) சுற்றளவில் உள்ள 729 வீடுகளில் இருந்து 2,800 க்கும் மேற்பட்ட கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நிரந்தர ஆபத்து மண்டலத்திற்கு வெளியே வசிக்கும் மேலும் 600 கிராமவாசிகள் எரிமலையிலிருந்து பாதுகாப்பாக இருக்க அரசாங்கத்தால் நடத்தப்படும் அவசரகால தங்குமிடங்களுக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.





