அமெரிக்கா மற்றும் கனடா வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை : மீள கோரப்படும் உணவு பொருள்!
கனடாவில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வான்கோழியால் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட பூனையொன்று உயிரிழந்ததை தொடர்ந்து செல்லப்பிராணிகளுக்காக விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மீள கோரப்பட்டுள்ளது.
நார்த்வெஸ்ட் நேச்சுரல்ஸ் அதன் “வான்கோழி ரெசிபி” மூலம் தயாரிக்கப்பட்டுள்ள உணவுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இதில் 98 சதவீத வான்கோழி இறைச்சி, உறுப்புகள் மற்றும் எலும்புகள் உள்ளன, சோதனைகள் பறவைக் காய்ச்சல் வைரஸுக்கு சாதகமாக வந்த பிறகு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தயாரிப்பு முதன்மையாக அமெரிக்காவில் வாஷிங்டன், அரிசோனா, ரோட் தீவு, ஜார்ஜியா, மேரிலாந்து மற்றும் பல மாநிலங்களில் உள்ள விநியோகஸ்தர்கள் மூலம் விற்கப்பட்டது.
அவை கனடாவிலும் மற்றும் இங்கிலாந்தில் உள்ள சிறப்பு மறுவிற்பனையாளர்கள் மூலமாகவும் கிடைக்கின்றன.
பூனைக்கு ஆய்வக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, இது பாதிக்கப்பட்ட பூனைக்கும் செல்லப்பிராணி உணவில் காணப்படும் வைரஸுக்கும் இடையே “மரபணு” தொடர்பு ஒன்றித்து இருப்பதாக கூறப்படுகிறது.