சிங்கப்பூரில் Telegram பயனாளர்களுக்கு எச்சரிக்கை

சிங்கப்பூரில் Telegram தளம் பயன்படுத்தும் அதிகமான மக்கள் மோசடிக்குள்ளாகுவதாக தெரியவந்துள்ள நிலையில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முற்பாதியில் Telegram தளத்தில் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 137.5 சதவீதம் அதிகரித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிக அதிகமாக முதலீட்டு மோசடிகள் நடந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஏனையவைகள் மின்-வணிக, வேலை மோசடிகளாகும்.
Facebook, WhatsApp, Instagram ஆகிய தளங்களையும் அக்கறைக்குரியவையாகக் பொலிஸார் வகைப்படுத்தியுள்ளனர்.
மோசடிக்காரர்கள் மோசடிகளை நிகழ்த்த அந்தத் தளங்களைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
(Visited 15 times, 1 visits today)