நாட்டில் வேகமாக பரவி வரும் வைரஸ் தொற்று குறித்து எச்சரிக்கை !
இலங்கையில் நிலவும் குளிரான காலநிலை காரணமாக வைரஸ் தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இளம் சிறுவர்களிடையே இந்த வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட வைத்திய அதிகாரி ரவீந்திர உடகமகே குறிப்பிட்டார்.
குளிர் மற்றும் வறண்ட வானிலை பல்வேறு வைரஸ் தொற்றுகள் விரைவாகப் பரவுவதற்கு பங்களிப்பதாகவும், இதனால் சுவாச குழாய் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, கடுமையான தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.




