உலகம்

டெக்ஸாஸில் வீடு வீடாக விநியோகிக்கப்படும் மர்மப் பொட்டலங்கள் தொடர்பில் எச்சரிக்கை!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலங்களில் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்கப்படும் தபால் பொதிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விநியோகிக்கப்படும் பொதிகளில் வரும்  விதைப் பொட்டலங்களை திறக்க வேண்டாம் என அதிகாரிகள் குடியிருப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

டெக்சாஸ் வேளாண்மைத் துறை (TDA) பிப்ரவரி 2025 முதல் 109 இடங்களில் இருந்து 1,101 விதைப் பொட்டலங்களை இவ்வாறு சேகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நியூ மெக்ஸிகோ (New Mexico), ஓஹியோ (Ohio) மற்றும் அலபாமா (Alabama) போன்ற பிற அமெரிக்க மாநிலங்களிலும் இது போன்ற  சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறித்த விதைகள் சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக இவை விவசாய பூச்சிகள் அல்லது தாவர நோய்களை அறிமுகப்படுத்தக்கூடும் என்றும் விவசாயத் தொழிலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும்  வேளாண் ஆணையர் சிட் மில்லர் ( Sid Miller) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பொட்டலங்கள் சீனாவிலிருந்து அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது என்றும் அதிகாரிகள் மேலும்  தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!