உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடலாம்
சிலர் தங்கள் உடல் எடையை குறைக்க விரும்புவர். உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் சாப்பாட்டை குறைக்க வேண்டும் என பலர் நினைப்போம். ஆனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சில உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் எடையை குறைக்கலாம். அவை என்னென்ன என்று பார்போம்.
வாழைப்பழங்கள் :
காலையில் வாழைப்பழம் சாப்பிடுவது உங்களின் பசியை பூர்த்தி செய்ய உதவும். உங்கள் உடலுக்கு தேவையான பைபரில் 12 சதவீதத்தை வாழைப்பழத்தால் தர இயலும்.
சாலட்: காய்கறிகளுடன் மிளகுதூள் சேர்த்து சாலட் சாப்பிட்டு வர உங்கள் உடல் எடை குறையும்.
முளைகட்டிய பயிறு:முளைத்த பயறு அல்லது பருப்பு வகைகளில் உள்ள டானின்கள், லெக்டின்கள் மதுரம் பைபெட்டுகள் உடலில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பினை குறைக்கின்றன. இதனை சாப்பிட்டு வர உங்கள் உட எடை கட்டுக்குள் இருக்கும்.
அவல்: எளிதில் ஜீரணமாக கூடிய ஒன்று. இதனை சாப்பிடுவதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராது. அவலில் சுவையான சிற்றுண்டிகள் செய்து சாப்பிடுவதால் உங்கள் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.