வாழ்வியல்

தினசரி 7,000 அடிகள் நடந்தால் போதும் – புதிய ஆய்வில் வெளியான தகவல்!

நாளாந்தம் 7,000 அடிகள் நடப்பது ஆரோக்கிய நன்மைகளைப் பெற போதுமானது என்று புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நோர்வேயைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் (journal Lancet Public Health) வெளியிடப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக நம்பப்பட்ட 10,000 அடிகள் இலக்கை விட, 7,000 அடிகள் நடப்பதே நாள்பட்ட ஆறு நோய்களின் அபாயத்தையும், அகால மரண அபாயத்தையும் கணிசமாகக் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 160,000 பெரியவர்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், தினசரி 7,000 அடிகள் நடப்பது, இறப்பு அபாயத்தை 50 சதவீதம் குறைக்கிறது. டிமென்ஷியா அபாயத்தை 38% குறைக்கிறது.

இருதய நோய் அபாயத்தை 25 சதவீதம் குறைக்கிறது. மேலும் நீரிழிவு மற்றும் மனச்சோர்வு அபாயமும் குறைவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

7,000 அடிகளுக்கு மேல் நடப்பது, 2 நீரிழிவு நோயைத் தடுப்பதை தவிர பெரிய நன்மைகளை வழங்கவில்லை என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆரோக்கிய நன்மைகளைப் பெற, உடனடியாக நடக்கத் தொடங்குவது அவசியம் என ஆராய்ச்சியாளர்கள், பரிந்துரைத்துள்ளனர்.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான