நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் தோன்றிய வாக்னர் (Wagner) படையினர்!
ஐரோப்பிய ஒன்றிய எல்லையிலிருந்து சில அடி தொலைவில் வாக்னர் (Wagner) தனியார் இராணுவத்தின் கொடியுடன் பயணித்த படகில் ரஷ்ய துருப்புகள் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இது ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் மற்றுமோர் போர் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
மொஸ்கோவின் FSB பாதுகாப்பு சேவையுடன் இணைக்கப்பட்ட எல்லைப் படைக் கப்பல், நேட்டோ நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள நர்வா (Narva) நதியில் பயணிப்பதை காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் இது எஸ்டோனியாவிற்கு (Estonia) பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த பயணம் தொடர்பில் ரஷ்யா தரப்பில் இருந்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
பல்லாயிரக்கணக்கான கூலிப்படையினரால் நிரம்பியிருந்த வாக்னர் (Wagner) தனியார் இராணுவ நிறுவனம், விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீது படையெடுத்த ஆரம்ப காலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தது.
பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் நிலைமைகள் ரஷ்யாவிற்கு எதிராக செயற்பட வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக குழுவின் தளபதி யெவ்ஜெனி பிரிகோஜின் (Yevgeny Prigozhin) விமான விபத்தொன்றில் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த படையினர் ஆப்பிரிக்காவில் கிரெம்ளினின் சார்பாக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் பொது வெளியில் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





