வாக்னர் குழுவின் தலைவர் விமான விபத்தில் உயிரிழப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக தோல்வியடைந்த சதிப்புரட்சிக்கு தலைமை தாங்கிய வாக்னர் கூலிப்படையின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஷின் பயணித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் இருந்த பயணிகளின் பட்டியலில் யெவ்ஜெனி பிரிகோஜின் இருப்பதாக ரஷ்ய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த விமான விபத்தில் வாக்னரின் இராணுவத்தின் உயர் பதவியில் இருந்த டிமிட்ரி ஓட்கினும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வாக்னரின் படைகள் முதலில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு உக்ரைனின் எல்லையில் உள்ள ரோஸ்டோவ் நகரைக் கைப்பற்றியது, பின்னர் அவர்கள் வெரோனிஷ் நகரத்தையும் கைப்பற்றினர்.
வாக்னர் ஆயுதக் குழு ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரில் ரஷ்யாவை ஆதரிக்கும் கூலிப்படையாக செயல்படுகிறது.
ரஷ்யாவுக்கு ஆதரவாக முன்வந்த வாக்னர் படைக்கு சொந்தமான பகுதியில் ரஷ்ய இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடிப்படையாக வைத்து ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் படையெடுப்பை தொடங்கினர்.