இங்கிலாந்தில் வட்டி விகிதக் குறைப்பு தொடர்பில் இன்று வாக்கெடுப்பு!
இங்கிலாந்தின் தேசிய வங்கியான Bank of England 2026 ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதக் குறைப்பு தொடர்பில் இன்று தனது வாக்கெடுப்பை நடத்தவுள்ளது.
குறிப்பாக தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 3.75 சதவீதம் என்ற நிலையில் பராமரிக்க முடிவு செய்யும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
நாணயக் கொள்கைக் குழு (MPC) நிலையான பணவீக்கம், மந்தமான பொருளாதார வளர்ச்சி, அதிக ஊதியங்கள் மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிலையான அணுகுமுறையை எடுக்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த மாதம் பணவீக்கமானது 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





