ரஷ்யாவில் 600 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்து சிதறிய எரிமலை!

600 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு எரிமலை வெடித்து, 29,000 அடி உயர சாம்பலை கக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் கம்சட்காவில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை ஒரே இரவில் எரிமலைக்குழம்புகளை வெளியேற்றத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்த எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
“600 ஆண்டுகளில் க்ராஷெனின்னிகோவ் எரிமலையின் வரலாற்று ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் வெடிப்பு இதுவாகும் என கம்சட்கா எரிமலை வெடிப்பு மறுமொழி குழுவின் தலைவரான ஓல்கா கிரினா தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)