வொடேசா தாக்குதல் : போதிய ஆயுதங்கள் இருந்திருந்தால் தவிர்த்திருக்கலாம் – செலன்ஸ்கி உருக்கம்!
ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு கைக்குழந்தை உள்பட ஏழுபேர் உயிரிழந்த விவகாரத்தில் போதிய ஆயுதங்கள் இருந்திருந்தால் மேற்படி தாக்குதலை தவிர்த்திருக்கலாம் என ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தெற்கு உக்ரைன் துறைமுக நகரமான ஒடேசாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை ட்ரோன் தாக்கியது.
ஈரான் வழங்கிய ஷாஹெட் ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்ய தாக்குதல்களை நடத்தியதாகவும், இந்த தாக்குதல்கள் இராணுவ உணர்வை ஏற்படுத்தவில்லை மாறாக கொலை மற்றும் அச்சுறுத்தல் மட்டுமே நோக்கமாக இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
“பயங்கரவாதத்தை எதிர்க்க முடியும் என்பதை உலகம் அறிந்திருக்கிறது,” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)