அமெரிக்க – சீனா பொருளாதாரத்தை துண்டிக்கப்போவதாக விவேக் ராமசாமி சபதம்!
அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான விவேக் ராமசாமி, நாட்டின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க-சீனா பொருளாதாரத்தை துண்டிக்கப் போவதாக சபதம் செய்துள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் போட்டியாளர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நிக்கி ஹேலி, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ், முன்னாள் நியூ ஜெர்சி ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி மற்றும் தென் கரோலினா செனட்டர் டிம் ஸ்காட் ஆகியோர் முன்னிலையில் கருத்து வெளியிட்ட விவேக் ராமசாமி, வலுவான கருத்தை முன்வைத்து உரையாற்றினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நமது எதிரிகளிடமிருந்து பொருளாதார சுதந்திரத்தை நாம் அறிவிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)