மோடியின் சிறப்பு தூதுவராகவே ஜெய்சங்கர் வருகிறார்: அநுரவுடன் நாளை சந்திப்பு!
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் (22) இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவரின் இலங்கை விஜயத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை இன்று (22) வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் இவ்விஜயம் இடம்பெறுகின்றது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு “ ஒப்பரேஷன் சாகர் பந்து” திட்டம் ஊடாக பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் கொழும்பு வருகையின்போது மேலதிக உதவித் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
அதேவேளை, சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுத் தலைவர் சாவோ லெஜி தலைமையில் உயர்மட்ட சீன குழுவொன்றும் நாளை இலங்கை வருகின்றது.





