“ராட்சசன் – 2” விஷ்ணு விஷால் கொடுத்த தரமான அப்டேட்

ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ‘ராட்சசன்’. இன்றளவும் ரசிகர்கள் பலரின் பேவரைட்டாக இப்படம் உள்ளது.
இந்நிலையில் பெரும் வரவேற்பினை பெற்ற ‘ராட்சசன்’ இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இது தொடர்பாக விஷ்ணு விஷால் அப்டேட் கொடுத்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் தனது தம்பி நடிக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் ‘ராட்சசன் 2’ எப்போது உருவாகும் என கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், ராட்சசன் இரண்டாம் பாகத்தின் வேலை அடுத்தாண்டு துவங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதோடு இவரது நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்ற கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகமும் வருவதாக கூறியுள்ளார் விஷ்ணு விஷால்.
முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகமும் தரமான சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.