ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சில நாடுகள் மீது விசா தடை – புதிய நடவடிக்கைக்கு தயாராகும் பிரித்தானியா!

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த பிரித்தானிய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ருவாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது.

இருப்பினும் ஒரு சில நாடுகள் சட்டவிரோத குடியேறிகளை மீள பெறும் ஒப்பந்தத்திற்கு இணங்கவில்லை. இந்நிலையில் ஒப்பந்தத்திற்கு இணங்காத நாடுகள் மீது விசா தடை விதிக்கப்போவதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மஹ்மூத்தின் இந்த அதிரடி அறிவிப்பை தொடர்ந்து அங்கோலா மற்றும் நமீபியா ஆகிய இரு நாடுகளும் தங்கள் நாட்டு குடிமக்களை ஏற்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

மேற்படி இருநாடுகளின் இந்த மனமாற்றமானது,  சட்டவிரோத குடியேறிகள் மற்றும் வெளிநாட்டு தேசிய குற்றவாளிகளை விரைவில் திருப்பி அனுப்ப இங்கிலாந்துக்கு உதவும் என்று உள்துறை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மஹ்மூத், நாடுகள் விதிகளின்படி செயல்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர்களின் குடிமக்களில் ஒருவருக்கு இங்கு இருக்க உரிமை இல்லையென்றால், அவர்கள் அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும்.

அங்கோலா மற்றும் நமீபியாவிற்கு நான் நன்றி கூறுகிறேன், அவர்களின் ஒத்துழைப்பை வரவேற்கிறேன். காங்கோ ஜனநாயகக் குடியரசு சரியானதைச் செய்ய வேண்டிய நேரம் இது. உங்கள் குடிமக்களைத் திரும்ப அழைத்துச் செல்லுங்கள் அல்லது எங்கள் நாட்டிற்குள் நுழையும் சலுகையை இழக்கச் செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!