சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் – பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை என எச்சரிக்கை
சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்ற வைரஸ்கள் பரவுவது இயல்பானது என்றும் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், சீனாவுக்கு செல்வதை தவிர்க்குமாறு பல நாடுகள் தற்போது தங்கள் குடிமக்களுக்கு அறிவித்துள்ளன.
இந்நிலையில், சீனாவுக்குச் செல்லும் சீன வாசிகள் மற்றும் வெளிநாட்டினரின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்றும், சீனாவுக்கு பயணம் செய்வது ஆபத்து இல்லை என்றும் சீன அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
Human Metapneumovirus – HMPV – சீனாவில் பரவி வருகிறது. இது ஒரு பொதுவான சளி, இது சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
‘கோவிட்-19’ தொற்றுநோய்க்குப் பிறகு, சீனாவில் பரவும் வைரஸ் குறித்து உலகம் முழுவதும் இப்போது உன்னிப்பாகக் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.