விராட் கோலியுடன் டேட்டிங்?? முதன்முறையாக ஓபனாக கூறிய தமன்னா
																																		விராட் கோலியும் தமன்னாவுடன் டேட்டிங் செய்ததாகவு, பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவிய நிலையில் நடிகை தமன்னா இதுகுறித்து விளக்கம் அளித்தார்.

பிரபலங்கள் கிசுகிசுவில் சிக்குவது ஒன்று புதிய விஷயமல்ல. சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி அவ்வப்போது விளையாட்டு பிரபலங்களும் சில கிசுகிசுவில் சிக்குவதுண்டு.

அந்த வகையில் நடிகை தமன்னாவும் விராட் கோலியும் டேட்டிங் செய்வதாக வதந்திகள் கிளம்பின. இருவரும் ஒரு விளம்பரத்தில் ஒன்றாக நடித்த நிலையில் இந்த வதந்தி பரவியது.

அப்போது பேசிய அவர் “ நாங்கள் அந்த விளம்பரத்தில் நடித்த போது 4 வார்த்தைகள் மட்டுமே பேசினோம். அவ்வளவு தான். அதற்குப் பிறகு நான் விராட்டை சந்திக்கவோ பேசவோ இல்லை. ஆனால், நான் பணிபுரியும் பெரும்பாலான நடிகர்களை விட அவர் சிறந்த மனிதர் என்று நான் சொல்ல வேண்டும்.” என்று தெரிவித்தார்.

விராட் மற்றும் அனுஷ்காவின் திருமண புகைப்படங்களை நீங்கள் பார்த்தீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த, தமன்னா “ ஆன்லைனில் எந்தப் படங்கள் வந்தாலும் நான் பார்ப்பேன். அந்த வகையில் விராட் அனுஷ்கா படங்களை பார்த்தேன். இருவரும் ஒன்றாக மிகவும் அழகாக இருந்தனர். அவர்கள் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகை தமன்னா நடிகர் விஜய் வர்மா உடன் டேட்டிங் செய்து வருகிறார். லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரிஸில் ஒன்றாக பணிபுரிந்த போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற இருவரும் தற்போது காதலித்து வருகின்றனர். மேலும் திரைப்பட நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஒன்றாக கலந்து கொள்கின்றனர்.
2023 புத்தாண்டை கொண்டாட தமன்னா விஜய் வர்மா இருவரும் கோவா சென்றிருந்தனர். அங்கு நடந்த பார்ட்டியில் தமன்னாவுக்கு விஜய் வர்மா லிப் லாக் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது.

விஜய் வர்மா உடனான உறவு குறித்து தமன்னா வெளிப்படையாக பேசி உள்ளார். பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர்” விஜய் வர்மாவிடம் நான் மிகவும் இயல்பாகப் பழகிய நபர். நான் அவர் மீது அதிக அக்கறை கொண்டுள்ளேன். அவருடன் இருக்கும் நேரத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்..” என்று தெரிவித்தார்.
 
        



                        
                            
