இலங்கை கிரிபத்கோடையில் வைரலான மோதல்: காதலன் உட்பட 2 பேர் கைது
சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவிய தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கிரிபத்கோடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு பெண் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கிரிபத்கோடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
தனியார் நிறுவன உரிமையாளர் ஒரு பெண் ஊழியருடன் காரில் பயணித்தபோது, அவரது காதலனும் மற்றொரு நபரும் வாகனத்தை வழிமறித்து அவரைத் தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து கிரிபத்கோடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 50 times, 1 visits today)





