உலகம்

லிபியாவின் தலைநகரில் போராளித் தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து வெடித்த வன்முறை

லிபியாவில் ஆயுதம் தாங்கிய பல அமைப்புகள் உள்ளன.அவற்றில் ‘சப்போர்ட் ஃபோர்ஸ் அப்பரேட்டஸ்’ எனும் அமைப்பும் ஒன்று.

எஸ்எஸ்ஏ என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு லிபியாவின் அதிபர் மன்றத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், எஸ்எஸ்ஏ அமைப்பின் தலைவரான அப்துல்கனி கிக்லி கொல்லப்பட்டார்.இதையடுத்து, ஆயுதம் தாங்கிய அமைப்புகளுக்கு இடையே சண்டை மூண்டுள்ளது.

லிபியத் தலைநகர் திரிப்பொலியின் மையப் பகுதியிலும் மற்ற பகுதிகளிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

வீட்டிலேயே இருக்குமாறு பொதுமக்களுக்கு லிபிய உள்துறை அமைச்சு அறிவுறுத்தியதை அடுத்து, சாலைகளில் இருந்த வாகனங்கள் வீடு நோக்கி விரைந்தன.

எஸ்எஸ்ஏ அமைப்பின் தலைமையகம் இருக்கும் அபு சலீம் பகுதி லிபியத் தற்காப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

வன்முறை காரணமாக வகுப்புகள், தேர்வுகள், இதர பணிகள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக திரிப்பொலி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

லிபியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் நிறுவன அலுவலகம், உடனடி சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்குமாறு அது கேட்டுக்கொண்டது.பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் போருக்குச் சமம் என்று அது கூறியது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்