இஸ்ரேல், ஈரான் வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித ஹேரத் பேச்சு!
இஸ்ரேல் Israel மற்றும் ஈரான் Iran ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath பேச்சு நடத்தியுள்ளார்.
தொலைபேசி ஊடாகவே நேற்று இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான தகவல்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் உடனான கலந்துரையாடலின்போது, அந்நாட்டிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்குரிய உத்தரவாதம் வழங்கப்பட்டது என அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

அதேவேளை, ஈரான் வெளிவிவகார அமைச்சருடனான கலந்துரையாடலின்போது பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலை இராஜதந்திர ரீதியில் கையாண்டு, அமைதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்துவம் பற்றி பேசப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கிலுள்ள ஏனைய சில நாடுகளின் , வெளிவிவகார அமைச்சர்களுடனும் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.





