தமிழ்நாடு

சீமான் மீது அளித்த புகாரை நள்ளிரவில் வாப்பஸ்பெற்ற விஜயலட்சுமி !

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி நள்ளிரவில் பொலிஸ் நிலையத்திற்கு நேரில் வந்து வாபஸ் பெற்றதால் பரப்பரப்பு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் நடவடிக்கை வேண்டாம் என தெரிவித்து விட்டு சென்ற நிலையில் கடந்த மாதம் மீண்டும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் பொலிஸார் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அளித்த நிலையில் வரும் 18ம் திகதி சீமான் விசாரணைக்கு ஆஜராவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வீரலட்சுமி சீமானுக்கு எதிராக வீடியோ ஒன்றை பதிவிட்ட நிலையில் வீரலட்சுமிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை விஜயலட்சுமி நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

I am waiting', says Seeman on likely police action - The Hindu

இந்த நிலையில் நள்ளிரவு 16.9.2023 வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்திற்கு தனது வக்கீல்களுடன் வந்த நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக கூறி வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் எழுத்துப்பூர்வமான வாபஸ் பெரும் கடிதத்தை அளித்தார்.

இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,சென்னையில் இருந்து தூரத்தில் தான் என்னை பொலிசார் வைத்திருந்தனர் வீரலட்சுமிக்கு தெரிந்த இடம் என்பதால் அங்கு வைத்திருந்தனர். கடந்த சில தினங்களாக வீரலட்சுமி ஒரு வழியில் செல்கிறார் என்னை ஒரு வழியில் எடுத்து செல்கிறார் .நேற்று இரவு முதல் அந்த இடத்தில் இருந்து என்னை வெளியே போக வைத்துவிட்டார் உணவையும் நிறுத்திவிட்டார் சொல்ல முடியாத அதிகமான கொடுமைகள் நடந்தது இந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு பெங்களூர் செல்கிறேன் யாருடைய வற்புறுத்தலினாலும் வாபஸ் பெறவில்லை சீமானிடம் பேசினேன் வழக்கை வாபஸ் பெற்று விட்டேன்

வழக்கை தொடர்வது சென்னைக்கு வருவது இனி இல்லை இந்த வழக்கில் எதிர்பார்த்த அளவுக்கு எனக்கு திருப்தி இல்லை சீமான் சூப்பர் அவருக்கு தமிழ்நாட்டில் முழு பவர் உள்ளது அவர் முன்பு யாரும் ஒன்றும் செய்ய முடியாது எனது தோல்வியை ஒத்து கொண்டு செல்கிறேன்என வழக்கை வாபஸ் பெற்ற பின் விரக்தியுடன் விஜயலட்சுமி பேட்டி அளித்துள்ளார்

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்