உடைத்து நொறுக்கிய பிரேமலதா.. விஜயகாந்த் போட்டோவை பார்த்தீர்களா?
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புகைப்படத்தை அவரின் மனைவி, கட்சியின் பொருளாளர் பிரேமலதா வெளியிட்டு உள்ளார்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அவரின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வந்தன.
அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டது.. மோசமாக்கிக்கொண்டு இருக்கிறது. அதனால் ரசிகர்கள், தொண்டர்கள் அங்கே குவிந்து வருகிறார்கள் என்று செய்திகள் வந்தன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்றுவரும் மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனைக்கு சுமார் 10 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
இவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரத்த கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடலநிலை மோசமாகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக நுரையீரல் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ள மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது, என்று கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புகைப்படத்தை அவரின் மனைவி, கட்சியின் பொருளாளர் பிரேமலதா வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
வதந்திகளை எல்லாம் உடைக்கும் வகையில், வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த புகைப்படத்தை விஜயகாந்த் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் விஜயகாந்தின் தலை முடி பெருமளவில் கொட்டி உள்ளது. அதேபோல் கழுத்து பகுதியில் வீக்கம் போல பெரிதாக காணப்படுகிறது.
பொதுவாக ஹெவி டோஸ் மருந்துகளை சாப்பிடும் போது இது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். ஹெவி டோஸ் மருந்துகள் காரணமாக முடிகள் உதிர்வது , கழுத்தில், உடலில் , வயிற்றில் வீங்குவது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.
இது எல்லாம் ஒரு வலிமையான நபரை.. நோயாளி போன்று காட்டினாலும் சிகிச்சைக்கு பின்.. மருந்துகளை குறைக்க குறைக்க பக்க விளைவுகளும் குறையும். வீக்கங்களுக்கு குறையும். தற்போது அவரின் இந்த தோற்றமும் தற்காலிக மருந்தின் விளைவுகளாவே இருக்கும் என்று கருதப்படுகிறது.
கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்.
வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார்.
யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.– திருமதி. பிரேமலதா விஜயகாந்த். pic.twitter.com/u6tvBGtCdD
— Captain Vijayakant (@iVijayakant) December 2, 2023