பொழுதுபோக்கு

சன் டிவியுடன் போட்டி போட்டு தோற்றுப்போன விஜய் டிவி… காரணம் இவர்கள் தான்…

சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று சொல்வதற்கு ஏற்ப டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் தக்க வைத்திருக்கிறது. இதில் டாப் 5 இடத்திற்கு எப்படியாவது விஜய் டிவியில் உள்ள ஒரு சீரியல் வந்துவிடும்.

ஆனால் சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் தோற்றுப் போய் வருகிறது. அதற்கு காரணம் மக்கள் எதிர்பார்ப்பையும் தாண்டி, கதை மோசமாகவும் சம்பந்தமே இல்லாமல் ட்ராக் போய்க் கொண்டிருப்பதால் மக்கள் நாடகத்தின் மீது வெறுப்பை கொட்டி வருகிறார்கள்.

அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் ரொம்பவே அடிவாங்கி விட்டது. சில மாதங்களுக்கு முன்பு வரை டிஆர்பி ரேட்டிங்கில் ஜொலித்து வந்த சிறகடிக்கும் ஆசை சீரியல் தற்போது ஏழாவது இடத்திற்கு போய்விட்டது.

இதற்கு காரணம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் முத்து மற்றும் மீனாவிற்கு தொடர்ந்து கெடுதல் பண்ணும் விதமாக ரோகிணியின் கதாபாத்திரம் எரிச்சலை ஊட்டும் விதமாக இருப்பதால்தான்.

இதே மாதிரி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன் மருமகளாக தங்கமயில் பல பொய்களை சொல்லி நுழைந்திருக்கிறார். ஆனாலும் தற்போது வரை மாமனார் குடும்பத்திற்கு எந்த வித தீங்கும் நினைக்காத ஒரு கேரக்டராக தான் இருக்கிறது.

இருந்தாலும் அவ்வப்போது வேதாளம் முருங்கை மரம் ஏறும் என்று சொல்வதற்கு ஏற்ப அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு தங்கமயில் ஆட்டத்தை ஆரம்பித்து வருகிறார். இதை இப்பொழுதே கண்டுபிடிக்கும் விதமாக சில காட்சிகள் அதிரடியாக இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

அப்படி இல்லை என்றால் ரோகிணி கதாபாத்திரம் மாதிரி தங்கமயில் கதாபாத்திரமும் எரிச்சல் அடைய வாய்ப்பு இருக்கிறது. இப்படி இந்த இரண்டு சீரியல்களிலும் மருமகளாக வந்த ரோகினி மற்றும் தங்கமயில் கேரக்டரால் தான் விஜய் டிவி சீரியல் மொத்தமாக அடி வாங்கிக் கொண்டு வருகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!