கமலை வம்புக்கு இழுத்தாரா விஜய்? தக் லைஃவ் பதில் கொடுத்த ஆண்டவர்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று மதுரையில் நடந்தது. லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் இதில் உற்சாகத்துடன் கலந்துகொண்டார்கள்.
அவர்கள் மத்தியில் பேசிய விஜய், ‘ஆண் சிங்கம் வேட்டையாட மட்டும்தான் வெளியே வரும்’ என தன்னை சிங்கத்தோடு ஒப்பிட்டு பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு ட்ரோல்களை சந்திக்க ஆரம்பித்திருக்கிறது.
மாநாட்டில் விஜய்யின் பேச்சும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தங்களது எதிரி பாஜகவும், திமுகவும்தான் என்பதை இதிலும் உறுதிப்படுத்தியிருந்தார். அதேபோல் 234 தொகுதிகளுக்கும் நானே வேட்பாளர் எனவும் அறிவித்திருக்கிறார்.
இவை தவிர்த்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள் என பேசியது திமுகவினரிடமும், சில பத்திரிகையாளர்களிடமும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது பேச்சுக்கு கண்டனங்களும் எழ தொடங்கியிருக்கின்றன.
அவர் பேசுகையில், “நான் சினிமாவில் மார்க்கெட் போன பிறகு அரசியலுக்கு வரவில்லை. உச்சத்தில் இருக்கும்போதே வந்திருக்கிறேன்” என தெரிவித்தார். இதனை கவனித்த ரசிகர்களோ, கமலைத்தான் மறைமுகமாக விஜய் விமர்சித்திருக்கிறார் என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
மேலும் சென்னை விமான நிலையத்தில் வைத்து கமலிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் எப்படி பதில் எழுத முடியும் என்று கூறி சென்றார்.
விஜய்யின் பேச்சில் ஹைலைட்டாகும் விஷயங்களில் ஒன்று அவர் தன்னை சிங்கத்தோடு ஒப்பிட்டு பேசியதுதான். அவர் மக்களை சந்திப்பதே இல்லை. ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்கிறார் என்று கிண்டல்கள் எழுந்திருக்கும் நிலையில், நேற்றைய மாநாட்டில், ‘சிங்கம் வேட்டையாட மட்டும்தான் வெளியே வரும். தன்னைவிட பெரிய சைஸில் இருக்கும் விலங்குகளைத்தான் சாப்பிடும்’ என்று பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு ட்ரோலை சந்திக்க ஆரம்பித்திருக்கிறது.