விஜய்–ராகுல் கூட்டணி – தமிழக அரசியலில் அதிர்ச்சியை கிளப்பும் புதிய வியூகம்!
தமிழக அரசியலில் பரபரப்பான புதிய திருப்பம் என்றே சொல்ல வேண்டும். நடிகர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு வெற்றிக் கழகம் விரைவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக நிர்வாகிகள் சிலரை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் விரைவில் ராகுல் காந்தியையும் நேரில் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நவம்பர் மாதத்தின் இறுதி வாரம் இந்த முக்கிய சந்திப்பு நடைபெறும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூட்டணி பற்றிய விஜயின் விருப்பம்
தவெக கட்சி ஆரம்பித்த நாளிலிருந்தே விஜய் கூட்டணிக்கு கதவுகளை திறந்தே வைத்துள்ளார்.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தனிப்பட்ட விருப்பமாகும் என கட்சித் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தியுடன் அவருடைய நீண்டகால நட்பும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறலாம்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது ராகுல் காந்தி விஜயிற்கு தொலைபேசியில் ஆறுதல் கூறியிருந்தார். அதன் பின்னர் இரு தரப்பினரிடையே
அரசியல் புரிதல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கோரிக்கைகள் – இட ஒதுக்கீடு பிரச்சனை
திமுக கூட்டணியில் காங்கிரஸ் குறைந்த தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது.
திமுக கூட்டணியில் தொடர்ந்து குறைவான தொகுதிகள் மட்டுமே கிடைக்கின்றன என்ற அதிருப்தி காங்கிரஸ் தரப்பில் அதிகரித்துள்ளதும்
மறுக்க முடியாத உண்மை.
2011 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் 2021 தேர்தலில் வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இந்த நிலையில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை எதிர்பார்க்கிறது.
குறிப்பாக, திமுக ஒதுக்காத இடங்களால் சில தலைவர்கள் தவெக-காங்கிரஸ் கூட்டணியை முன்னெடுக்க தயாராக இருக்கலாம்.
தவெக-காங்கிரஸ் கூட்டணி உருவானால், காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்சம் 60 தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி, மற்றும் ஆட்சியில் பங்கு வாய்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இதன் மூலம் 2026 தேர்தல் வரைபடத்தில் முழுமையான மாற்றம் ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என திமுக தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதற்காக அவர் முக்கிய நிர்வாகி ஊடாக விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளிடம் தனிப்பட்ட்ட முறையில் பேசியதாக கூறப்படுகிறது.
தவெக உடன் இணைந்தால் ஆட்சியில் பங்கு என புதிய கதவுகள் திறக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.
மறுபுறம், திமுக கூட்டணியில் இடங்கள் குறைவாக இருந்தால், தேமுதிக, ராமதாஸ், கருணாஸ் போன்ற கட்சிகளுடன் மாற்று கூட்டணி ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தேர்தல் வெற்றி நிலையை பாதுகாக்கும் முயற்சிகள் நடக்கலாம்.
விஜயின் பிரபல வாக்கு வங்கி 2026 ஆம் ஆண்டில் கூட்டணிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
அதாவது, மக்கள் மத்தியில் விஜய் பிரபலமாக உள்ளதால் அவர் சார்ந்த கட்சிக்குக் கூட்டணி வாய்ப்புகளை வலுப்படுத்தும், தொகுதிகளை வெல்லும் சாத்தியத்தை அதிகரிக்கும் என்பதையை சுட்டிக்காட்டுகிறேன்.
திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதி ஒதுக்கீடு காங்கிரஸின் அதிருப்திக்கு முக்கிய காரணம்.
ராகுல் காந்தி மற்றும் விஜயின் நெருங்கிய உறவு, கூட்டணி அமைப்பில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சியில் பங்கு மற்றும் தொகுதிகள் காங்கிரஸின் வாக்கு வங்கியாக மாறி 2026 தேர்தல் வரைபடத்தை மாற்றும்.
அதிக தொகுதிகள் மற்றும் வாக்கு வங்கியைச் சேர்த்தால், முன்னர் வெற்றியில்லாத இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு அதிகரிக்கும்.
இதன் விளைவாக, முழு மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் மாறும், திமுக மற்றும் பிற கட்சிகளின் முன்னிலை பாதிக்கப்படும்.
மாற்று கூட்டணி திட்டங்கள் திமுகவிற்கு புதிய வியூகங்களை உருவாக்கி தேர்தல் முடிவுகளை பாதிக்கக்கூடும்.
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை உருவாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
2026 ஆம் ஆண்டில் தவெக-காங்கிரஸ் கூட்டணி உருவானால், திமுக மற்றும் காங்கிரஸ் முன்னாள் வலிமைகள் முற்றிலும் சீர்திருத்தம் செய்யப்படலாம்.




