சொந்த கட்சிக்கே சூனியம் வைக்கும் விஜய்…

2026-இல் விஜயின் கொடி தமிழகத்தில் நட்டப்படுமா என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.
விஜய்க்கு எப்படி சினிமாவில் ஆதரவு கிடைத்ததோ அதே மாதிரி தான் தற்போது அரசியலிலும் பல ஆதரவுகள் கிடைத்து வருகிறது.
சினிமாவில் இருக்கும் போது கூட இந்த அளவுக்கு நெகட்டிவ் விமர்சனம் விஜய்க்கு வந்ததில்லை ஆனால் அரசியலுக்கு வந்ததற்கு பிறகு த்ரிஷாவையும், விஜய்யும் வைத்து, பல பொய்யான தகவல்களும் வலைத்தளத்தில் பரவி வருகிறது.
விஜயின் பிறந்தநாள் அன்று ரசிகர்களை காக்க வைத்ததின் பின்விளைவு “விஜய் நிச்சயமாக த்ரிஷா வீட்டிற்கு தான் பர்த்டே பார்ட்டி கொண்டாட போயிருக்கிறார்” என்ற பேச்சும் வலைத்தளத்தில் காற்று தீ போல் பரவி வந்தது.
தற்போது இதையடுத்து இன்னொரு தகவலும் பரவி வருகிறது. அர்ஜுன் ரெட்டி என்பவர் விஜய் கூட இருக்கும் அரசியல் பிரமுகர். இவர் முற்றிலும் பாஜக கட்சியை சேர்ந்தவர். இவரின் மேல் மற்றும் இவர் மாமனார் மேல் அமலாக்கத்துறை புகார் இருக்கிறது தகவல் வந்துள்ளது.
இது மட்டுமில்லாமல் விஜயின் காட்டியாக இருக்கும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் இவருமே பாஜக கட்சியில் இருந்து வந்தவர் தான் எனக் கூறப்படுகிறது. இதையெல்லாம் பார்க்கும் விஜய் தன் சொந்த கட்சிக்கே ஆப்பு வைத்தது போல் இருக்கிறது.