பொழுதுபோக்கு

திருமண பந்தத்தில் இணைந்தது விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி

நடிகர் விஜய் தேவரகொண்டா Vijay Deverakonda , நடிகை ராஷ்மிகா மந்தனா Rashmika Mandanna ஆகியோரது திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

கடந்த சில தினங்களாக உதய்பூரில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் திருமண வைபவங்கள் நடைபெற்று வந்தன.

இதில் இருவரது குடும்பத்தினரும் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று (26)முற்பகல் 10:10 மணிக்கு இருவரது திருமணமும் நடைபெற்றது.

புது மண தம்பதியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், தொழிலதிபர் அம்பானி தனது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.

திருமணத்தைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது.

இதில் ஒட்டுமொத்த திரையுலகினரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

 

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!