சென்னை விமான நிலையம் வந்த விஜய் : வைரலாகும் புகைப்படம்!

நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. இதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே லியோ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக நா ரெடியா வரவா பாடல் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், அந்த பாடலின் சில வரிகளை நீக்குமாறு சென்சார் போர்ட் கூறியது.
இவ்வாறு பல போராட்டங்களை கடந்த லியோபடம் திரைக்குவர தயாராகி வருகிறது. இதற்கிடையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜயம் இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் அவர் நடந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறன்றன.
(Visited 11 times, 1 visits today)