இலங்கை

செனல் 4 வெளியிட்ட காணொளி – முக்கிய பிரபலம் வெளியிட்ட பரபரப்பு தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் செனல் 4 வெளியிட்ட தகவல்களை தாம் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ராஜபக்சவே பொறுப்பு என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்திய புலயாய்வு பிரிவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் உயர் மட்டத்தில் இருந்த அரசியல்வாதிகள் இது குறித்து அறிந்திருக்க வேண்டும்.

இதனை ஒரு சிறிய விடயமாகவே அவர்கள் கருதியிருந்தனர். ஆனால் இதுவொரு கோலைத்தனமான தாக்குதல் ஆகும். இந்த சம்பவம் இடம்பெற்ற போது மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர் சென்றிருந்தார்.

ஒன்றரை நாள் கழிந்தே அவருக்கு இந்த சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கூறுவது சரியானதே. நான் அவரை மதிக்கிறேன்.
இந்த சம்பவத்துடன், முக்கிய அரசியல் வாதிகளுக்கு பெரிய தொடர்பு இருக்கின்றது. அதிகாரத்தை கைப்பற்ற ராஜபக்சர்கள் தெரிந்தே இந்த சதியை செய்துள்ளனர்.
மற்றவர்கள் இதற்கு துணை இருந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் செனல் 4 வெளியிட்ட தகவல்களை நான் ஏற்றுக்கொள்கின்றேன். சில ஊடகங்கள் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றன.

எனினும், இதுவொரு மிகப் பெரிய பிரச்சினை ஆகும். தவறு செய்திருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். இதற்கு அஞ்சும் ஆள் நான் இல்லை.
அன்றைய அரச தலைவர்கள் ராஜபக்சவே இதற்கு முழுப் பொறுப்பு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்