உலகம் செய்தி

வெனிசுலா ஜனாதிபதிமீது ட்ரம்ப் பொருளாதார போர் தொடுப்பு!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் மூன்று மருகமன்மார்மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

வெனிசுவெலா கரையோரம் எரிபொருள் தாங்கி கப்பலை அமெரிக்கா கைப்பற்றிய விவகாரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையிலேயே வெனிசுலாமீதான அடுத்தக்கட்ட அடியாக மேற்படி பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடை செய்யப்பட்ட மருமகன்களில் இருவர் அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை பெற்றவர்கள்.

எனினும், கைதிகள் பரிமாற்றத்தின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

வெனிசுலாவுடன் தொடர்பை பேணும் ஆறு கப்பல் நிறுவனங்களுக்கும் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வெனிசுவாலின் எரிபொருள் துறை குறிவைக்கப்பட்டுள்ளது.

Sanath

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!