வெற்றிமாறன் – சிம்பு இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன், இப்படம் குறித்து சிறிய வீடியோ ஒன்றை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கலைப்புலி தாணு நேற்று தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில், வெற்றிமாறன் – சிலம்பரசன் இணைந்துள்ள இப்படத்திற்கு ‘அரசன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு இரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் ஒரு சைக்கிளுக்கு அருகில் நின்றுகொண்டு இருப்பதைப் போல் அந்த போஸ்டர் உள்ளது.

(Visited 2 times, 1 visits today)





