மிரட்டி பணம் பறித்த அமெரிக்கா : வெனிசுலா முன்வைத்துள்ள பரபரப்பு குற்றச்சாட்டு!
நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில், அமெரிக்கா மிரட்டி பணம் பறித்ததாக வெனிசுலா குற்றம் சாட்டியுள்ளது.
வொஷிங்டன் வெனிசுலாவின் இரண்டு எண்ணெய் டேங்கர்களைக் கைப்பற்றியது “கடற்கொள்ளையை விட மோசமானது” என்று ஐ.நா.வுக்கான வெனிசுலா தூதர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே வெனிசுலாவின் மூன்றாவது எண்ணெய் டேங்கரைத் துரத்தி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) போதைப்பொருள் கும்பலை வழிநடத்துவதாகவும், கும்பல்கள் நீண்ட காலமாக தண்டனையின்றி செயல்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியே இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
டிசம்பர் 16 அன்று, வெனிசுலாவிற்குள் நுழைந்து வெளியேறும் அனைத்து அனுமதிக்கப்பட்ட எண்ணெய் டேங்கர்களையும் முற்றுகையிட கடற்படைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதற்கமைய இரண்டு எண்ணெய் டேங்கர்களை அமெரிக்க கடற்படையினர் கைப்பற்றினர்.
அமெரிக்கா தான் கைப்பற்றிய டேங்கர்களில் உள்ள கச்சா எண்ணெயையும், கப்பல்களையும் வைத்திருக்கும் அல்லது விற்பனை செய்யும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே வெனிசுலா, அமெரிக்காவின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.





