104 அரசியல் கைதிகளை விடுவித்த வெனிசுலா
வெனிசுலாவில்(Venezuela) அரசியல் கைதிகளாக பட்டியலிடப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்களை விடுவித்துள்ளதாக ஒரு உரிமைக் குழு தெரிவித்துள்ளது.
கராகஸை(Caracas) தளமாகக் கொண்ட உரிமைக் குழுவான ஃபோரோ பெனல்(Foro Penal) குறைந்தது 104 கைதிகள் விடுவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தி, இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
விடுவிக்கப்பட்டவர்களில் ஃபோரோ பெனல் உரிமைக் குழுவின் வழக்கறிஞர் கென்னடி டெஜெடா(Kennedy Tejeda) மற்றும் தகவல் தொடர்பு மாணவர் ஜுவான் பிரான்சிஸ்கோ அல்வராடோ(Juan Francisco Alvarado) ஆகியோர் அடங்குவர் என்று குழு தெரிவித்துள்ளது.
வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான டெஜெடா, ஆகஸ்ட் 2, 2024 அன்று அரசியல் கைதிகளுக்கு சட்ட உதவி வழங்குவதற்காக கராபோபோ(Carabobo) மாநிலத்தில் உள்ள ஒரு தடுப்பு மையத்திற்குச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.




