எண்ணெய் உற்பத்தியை தனியார் மயமாக்கிய வெனிசுலா! அமெரிக்காவிற்கு அடித்த ஜாக்பாட்!
வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) அந்நாட்டின் எண்ணெய் துறையை தனியார்மயமாக்குவதற்கு வழிவகை செய்யும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
வெனிசுலாவின் எண்ணெய் துறை மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தியதால், அந்நிய முதலீட்டை ஈர்க்கும் சட்டமூலத்தை தேசிய சட்டமன்றம் நேற்று நிறைவேற்றியது.
இதனைத் தொடர்ந்து எண்ணெய் வளத்தை தனியார் மயமாக்குவதற்கான சட்டத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது அமெரிக்க நிறுவனங்களுக்கு வெனிசுலா கச்சா எண்ணெயை வாங்க, விற்க, கொண்டு செல்ல, சேமிக்க மற்றும் சுத்திகரிக்க அனுமதியளிக்கிறது.
எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையில் தனியார் நிறுவனங்களுக்கு கட்டுப்பாட்டை வழங்குவதாகவும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் திருத்தப்பட்ட சட்டம், பிரித்தெடுக்கும் வரிகளை மாற்றியமைக்கும், ரோயல்டி வரம்பு விகிதத்தை 30% நிர்ணயித்து, மூலதன முதலீட்டுத் தேவைகள், போட்டித்தன்மை மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் ஒவ்வொரு திட்டத்திற்கும் நிர்வாகக் கிளை வரி விகிதத்தை நிர்ணயிக்க வழிவகுத்துள்ளது.
இதேவேளை குறித்த சட்டமானது இரண்டு வாரங்களுக்குள் முன்மொழியப்பட்டு சட்டமாக இயற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





