அமெரிக்காவின் பொருட்களை மட்டுமே வெனிசுலா கொள்வனவு செய்ய வேண்டும் – ட்ரம்ப் கட்டளை!
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட” பொருட்களை மட்டுமே வெனிசுலா கொள்வனவு செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அமெரிக்காவுடனான தனது புதிய எண்ணெய் ஒப்பந்தத்தின் நிதியைப் பயன்படுத்தி “அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட” பொருட்களை மட்டுமே வெனிசுலா கொள்வனவு செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் அறிவிப்பின்படி பார்க்கும்போது, அமெரிக்க விவசாய பொருட்கள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், வெனிசுலாவின் மின்சார கட்டம் மற்றும் எரிசக்தி வசதிகளுக்கான உபகரணங்கள் ஆகியவை இதன் கீழ் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெனிசுலா அமெரிக்காவை அதன் முதன்மை வணிக கூட்டாளியாக மாற்றுவதே அந்நாட்டிற்கு நன்மை பயங்கும் என்றும், இதுவே புத்திசாலித்தனமான தீர்வு எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வெனிசுலாவின் எண்ணெய் விற்பனையிலிருந்து கிடைக்கும் அனைத்து வருமானங்களும் அமெரிக்க வங்கிக் கணக்குகளில் சட்டப்பூர்வமாக்கப்படும் என்பதை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





