வெனிசுலா விவகாரம் – அமைதி காக்கும் உலக நாடுகள் : விளக்கம் கோரும் ஐ.நா சபை!
வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீடு சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை வெனிசுலாவில் நிலைமைகளை மோசமாக்கும் என்றும், சக்திவாய்ந்த நாடுகள் தாங்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் அஞ்சுகிறது.
இந்நிலையில் இது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் உள்ளிட்ட பல தலைவர்கள் ஆதரிக்கும் வகையில் மௌனம் காத்து வருகின்றனர்.
அமெரிக்கா மதுரோவை கைது செய்ததை அடுத்து, கராகஸில் அமெரிக்க தாக்குதலில் இங்கிலாந்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், ஆனால் டிரம்பிடம் பேசி “முதலில் உண்மைகளை நிறுவ” விரும்புவதாகவும் ஸ்டார்மர் அறிவித்தார்.
உலக தலைவர்களின் இவ்வாறான நடவடிக்கை தொடர்பிலேயே ஐக்கிய நாடுகள் சபை விளக்கம் கோரியுள்ளது.





