வெனிசுலா விவகாரம் : அமெரிக்க கட்சிகளிடையே குழப்பம் – வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!
வெனிசுலாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள சமீபத்திய இராணுவ நடவடிக்கை குறித்து ட்ரம்ப் நிர்வாகம் காங்கிரஸ் கட்சியினருக்கு விளக்கமளித்துள்ளது.
குடியரசு கட்சியினர் ட்ரம்பின் நடவடிக்கையை பெருமளவில் ஆதரித்துள்ளனர். அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சியினர் அதன் செலவு மற்றும் வெனிசுலாவின் இடைக்காலத் தலைமை குறித்த தெளிவின்மை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நடவடிக்கை ஆட்சி மாற்றத்திற்கு அல்ல, மாறாக போதைப்பொருள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நடத்தை மாற்றத்திற்கான கோரிக்கையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷுமர் (Chuck Schumer) அமெரிக்காவின் நடவடிக்கையை ஆபத்தானது என விமர்சித்துள்ளார்.
சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்ற மாநாட்டில் வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பு தொடர்பில் தெளிவான விளக்கங்கள் முன்வைக்கப்படவில்லை எனவும், பல கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் இறுதி முடிவெடுக்க செனட் சபை வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.





