ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் மாயமான கார் – பொலிஸாரின் கோரிக்கை

பிரித்தானியாவில் தமிழர்கள் அதிகம் வாழும் ஹெரோவில் உள்ள Kingshill Driveஇல் இருந்து கருப்பு நிற லெக்ஸஸ் NX வாகனம் ஒன்று திருடப்பட்டது.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற கார் திருட்டு தொடர்பில் பொலிஸார் தற்போதே தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான எதையும் பார்த்திருந்தால் அல்லது கேட்டவர்கள் இருந்தால் முன் வருமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Kingshill Drive என்பது கென்டன் வீதி மற்றும் கென்டன் லேனை இணைக்கும் ஹெரோ வழியாக உள்ள ஒரு நீண்ட வீதியாகும்.

இந்த திருட்டு தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் இருந்தால் 101 என்ற இலக்கத்தை அழைத்து குற்றக் குறிப்பு 01/496712/24ஐ மேற்கோள்காட்டி தகவலை வழங்கலாம்.

அல்லது 0800 555 111 என்ற எண்ணில் அநாமதேய உதவிக்குறிப்புகளை வழங்கலாம்.

இந்த அறிவிப்பை PCSO அந்தோணி பெர்னாண்டஸ் Owl இணையதளத்தில் வெளியிட்டார்.

(Visited 30 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!