வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவானது எஸ்டிஆர் 49 ப்ரோமோ

வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு சிம்புவின் 49வது படத்தின் ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒரு 35 நொடிகள் மட்டுமே நடக்கக்கூடிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
சிம்புவின் 49வது படத்தை இதுவரை பல தடவை மாற்றிய நிலையில், கடைசியாக வெற்றிமாறன் படம் தான் சிம்புவின் 49வது படம் என்பது உறுதியாகி உள்ளது.
ஹீரோக்களுக்கான பில்டப்புகளை கொடுப்பதை தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் கூட விடவில்லையே என ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். மிஷ்கின் ஸ்டைலில் வெறும் சிம்புவின் கால்களை மட்டுமே காட்டி விட்டு ஃபர்ஸ்ட் லுக் தோற்றம் கூட காட்டாமல் விட்டது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது. இது வெற்றிமாறன் படமா? அல்லது மிஷ்கின் படமா என கேள்விகள் எழுந்துள்ளன.
வடசென்னை படத்தில் முதலில் சிம்பு தான் நடித்திருக்க வேண்டும். ஆனால், இடையே தனுஷ் வந்ததால் அந்த படம் சிம்பு பண்ண முடியாமல் போய்விட்டது என வெற்றிமாறன் கூறிய நிலையில், சிம்பு – வெற்றிமாறன் இணையும் படம் தாறுமாறாக இருக்கும் என்றும் இந்த அப்டேட்டே கூஸ்பம்ப்ஸ் கொடுப்பதாக சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.