இந்தியா மற்றும் UAE இடையே கையெழுத்தான பல்வேறு ஒப்பந்தங்கள்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இருதரப்பு சந்திப்பை நடத்தினர்,
மேலும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அபுதாபியில் அவர்கள் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
“முதலில், உங்கள் அன்பான வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஏழு மாதங்களில் நாங்கள் ஐந்து முறை சந்தித்தோம், இது மிகவும் அரிதானது. எனக்கும் ஏழு முறை இங்கு வரும் வாய்ப்பு கிடைத்தது,ஒவ்வொரு துறையிலும் நாம் முன்னேறிய விதத்தில், ஒவ்வொரு துறையிலும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே கூட்டு உள்ளது” என்று ஐக்கிய அரபு அமீரக அதிபருடனான சந்திப்பில் பிரதமர் மோடி கூறினார்.
இந்த சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரக அதிபர் அல் நஹ்யான் வரவேற்றார். இரு தலைவர்களும் கைகுலுக்கி ஒருவரையொருவர் கட்டித்தழுவினர்.
“அபுதாபி விமான நிலையத்தில் என்னை வரவேற்பதற்கு நேரம் ஒதுக்கியதற்காக எனது எச்.ஹெச். முகமதுபின்சயீத் அவர்களுக்கு மிகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் பயனுள்ள பயணத்தை நான் எதிர்நோக்குகிறேன்” என்று பிரதமர் மோடி X இல் பதிவிட்டுள்ளார்.