வனிதாவின் இரண்டாவது மகள் எங்கே? யாருடன் இருக்கின்றார்?
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
அவ்வப்போது வெளியே தெரிந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக்பாஸுக்கு பிறகு அநீதி, அந்தகன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்தச் சூழலில் அவர் தனது இரண்டாவது மகள் குறித்து பேசியிருக்கிறார்.
“ஜெயா இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறார். எட்டாவது வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். முக்கியமாக அவர் தனது பள்ளியில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பள்ளியின் லீடராக இருக்கிறார்.
அவர் அவரது அப்பாவுடன் இருக்கிறார். நானும் ஜெயாவின் தந்தையும் டீசண்ட்டாக பேசி; நான் பிஸியாக இருக்கிறேன் என்பதால் தனது அப்பாவுடன் ஜெயா இப்போது இருக்கிறார். எங்கேயும் காணாமல் எல்லாம் போகவில்லை” என்றார்.

(Visited 22 times, 1 visits today)





