சின்ன திரை பிரபலத்துக்கு குழந்தை பிறந்தது!

சின்ன திரை நடிகை வைஷாலி தணிகா மற்றும் சத்ய தேவ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தனக்கு குழந்தை பிறந்துள்ள செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைஷாலி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
வைஷாலி தணிகா தனது கணவர் சத்ய தேவ் உடன் மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்ன திரை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தற்போது, மகாநதி தொடரில் வெண்ணிலா பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை வைஷாலி தணிகா, தான் கருவுற்று இருப்பதாக முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வைஷாலி தணிகா – சத்ய தேவ் தம்பதிக்கு சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
(Visited 3 times, 3 visits today)