பொழுதுபோக்கு

மொத்த TRB ரேட்டுக்கும் திட்டம் போட்ட சன்டிவி… வடிவேலுக்கு சென்ற அழைப்பு

வைகைப்புயல் வடிவேலு நடித்த படம் தான் மாமன்னன். வடிவேலுவை வேறு ஒரு பரிமாணத்தில் மாரி செல்வராஜ் காட்டி இருந்தார்.

ஆனாலும் அதன் பிறகு வடிவேலு நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 போன்ற சில படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.

இவ்வாறு வெள்ளிதிரையில் தொடர்ந்து பிளாப் கொடுத்து வரும் நிலையில் சன் டிவி வடிவேலுவை தட்டி தூக்கி இருக்கிறது.

அதாவது விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற பிரபல நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இப்போது சன் டிவிக்கு வந்திருக்கிறார்.

அதுவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அப்படியே காப்பி அடித்து தான் சன் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர். அதுவும் இந்நிகழ்ச்சிக்கு டாப் குக்கு டூப் குக்கு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தான் வடிவேலு பங்கு பெற இருக்கிறார். இதற்கு ஒரு எபிசோடுக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி வரை சம்பளம் கேட்டுள்ளாராம் வடிவேலு.

வடிவேலு கேட்ட சம்பளத்தையும் சன் டிவி மாறன் கொடுப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போல் இந்த நிகழ்ச்சியும் வெற்றி பெறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!