உலகம் செய்தி

பலஸ்தீனியர்கள் சங்கிலியில் கட்டி நாடுகடத்தப்படுகிறார்களா?

அமெரிக்காவில் இருந்து பலஸ்தீனியர்களை நாடுகடத்தும் விமானங்கள், அயர்லாந்தின் கிளேர் கவுண்டியில் (County Clare) உள்ள ஷானன் விமான நிலையம் (Shannon Airport) வழியாக சென்றது குறித்து அந்நாட்டு அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) க்கு நன்கொடையளித்த தொழிலதிபர் கில் டெசர் (Gil Dezer) க்கு சொந்தமான தனியார் ஜெட் விமானம், அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்கத் துறை ICE (Immigration and Customs Enforcement) மூலம் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக கார்டியன் (The Guardian) பத்திரிகை வெளியிட்ட விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த விமானங்கள் ஜனவரி 21 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய திகதிகளில் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டன. இரு முறையும், எரிபொருள் நிரப்புவதற்காக ஷானன் விமான நிலையத்தில் (Shannon Airport) நிறுத்தப்பட்டுள்ளன.

விமானத்தில் பயணித்த சிலர், முழு பயணமும் தங்களின் கை மற்றும் கால்களில் சங்கிலிகள் போடப்பட்டிருந்ததாக கூறியுள்ளனர். டெல் அவிவ் விமான நிலையத்தில் இறங்கிய பின், அவர்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமானங்கள் “பயணிகளை ஏற்றவோ இறக்கவோ செய்யாததால்  போக்குவரத்து துறையின் முன்அனுமதி தேவையில்லை என அயர்லாந்து அரசு  வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லேபர் கட்சி வெளிநாட்டு விவகார பேச்சாளர் டங்கன் ஸ்மித் (Duncan Smith), “ICE நாடுகடத்தல் விமானங்கள் ஷானனில் நிறுத்தப்படுவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.

கிரீன் கட்சி (Green Party) தலைவர் ரோடெரிக் ஓ’கோர்மன் (Roderic O’Gorman),
“ட்ரம்பின் ICE அமைப்பின் கொடூர நடவடிக்கைகளுக்கு ஷானன் விமான நிலையம் பயன்படுத்தப்படுவது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.

இந்த விமானம், அமெரிக்காவில் உள்ள ஜர்னி ஏவியேஷன் (Journey Aviation) என்ற நிறுவனத்தின் மூலம் வாடகைக்கு எடுக்கப்பட்டது. இந்த நிறுவனம் அமெரிக்க அரசுக்கு தனியார் ஜெட் விமானங்களை ஏற்பாடு செய்வது வழக்கம்.

ஹியூமன் ரைட்ஸ் ஃபர்ஸ்ட் (Human Rights First – HRF) என்ற மனித உரிமை அமைப்பின் தகவலின்படி, டெசரின் ஜெட் விமானம் கடந்த அக்டோபர் )ன மாதம் முதல் நாடுகடத்தல் விமானங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. முன்பு கென்யா (Kenya), லைபீரியா (Liberia), கினியா (Guinea) மற்றும் எஸ்வாத்தினி (Eswatini) ஆகிய நாடுகளுக்கும் கைதிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரான மகர் அவாத் (Maher Awad),
“எங்களை சாலையோரத்தில் விலங்குகளைப் போல இறக்கிவிட்டார்கள். உதவி கேட்டு வீடுகளின் கதவுகளைத் தட்டினோம்” என்று கூறினார்.

கில் டெசர் (Gil Dezer), கார்டியன் (The Guardian) பத்திரிகைக்கு அனுப்பிய மின்னஞ்சலில், தனது விமானத்தில் யார் பயணம் செய்தார்கள் என்பது தனக்குத் தெரியாது என்றும், பயன்படுத்தப்பட்ட திகதிகள் மட்டுமே தமக்கு தெரிவிக்கப்படுவதாகவும் கூறினார்.

இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை நேரடி பதில் அளிக்கவில்லை. ஆனால், “ஒரு நீதிபதி ஒருவர் சட்டவிரோத குடியேறி (Illegal Alien) என்று தீர்ப்பளித்தால், அவரை நாட்டிலிருந்து வெளியேற்றுவோம். அதுதான் முடிவு” என்று தெரிவித்தது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!