ஆசியா

அமெரிக்க நிதி மந்திரி தைவான் வருகை ;எல்லையில் கப்பல், விமானங்களை நிறுத்திய சீனா

தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்ற நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வரும் சீனா, வேறு எந்த நாடும் தைவானுடன் வர்த்தகம், தூதரக உறவுகளை மேற்கொள்ளக்கூடாது என எச்சரித்துள்ளது. ஆனால் தைவானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது. அடிக்கடி தனது நாட்டின் பிரதிநிதிகளை தைவானுக்கு அனுப்பி தனது ஆதரவை உறுதி செய்து வருகிறது.

அந்தவகையில் தற்போது அமெரிக்க நிதி மந்திரி யெல்லன் தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பிலான துப்பாக்கி, பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய ஒப்பந்தமிடப்பட்டு உள்ளது.

China sends warships and fighter jets near Taiwan during U.S. Beijing visit  | CTV News

அமெரிக்காவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவான் நாட்டின் வான் மற்றும் கடல் பரப்பில் 13 விமானங்கள், 6 கப்பல்களை சீனா அனுப்பி உள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவின் நடவடிக்கைகளை தாங்கள் கவனித்து வருவதாகவும், பதில் தாக்குதலுக்காக ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்