வட அமெரிக்கா

தென்கிழக்காசிய நாடுகளின் சூரியசக்தித் தகடுகளுக்கு வரி விதிக்கும் அமெரிக்கா

அமெரிக்க அதிகாரிகள், தென்கிழக்காசியாவிலிருந்து இறக்குமதியாகும் சூரியசக்தித் தகடுகளுக்கு நவம்பர் 29ஆம் திகதி, புதிய வரியை விதித்துள்ளனர்.

தென்கிழக்காசிய நிறுவனங்கள், நியாயமற்ற வகையில் மலிவான பொருள்களைச் சந்தையில் குவிப்பதாக அமெரிக்காவில் சூரியசக்தித் தகடுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் புகாரளித்ததைத் தொடர்ந்து இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இத்தகைய புகார் தொடர்பில் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்காவில் சூரியசக்தித் தகடு உற்பத்தியில் முதலீடு செய்யப்பட்டுள்ள பில்லியன்கணக்கான டொலர்களைப் பாதுகாக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.அரிசோனாவில் அமைந்துள்ள ‘ஃபர்ஸ்ட் சோலார்’ நிறுவனம், கொரியாவின் ‘ஹன்வா கியூசெல்ஸ்’ நிறுவனம் ஆகியவற்றுடன் இதர சிறு நிறுவனங்களும் தென்கிழக்காசிய இறக்குமதி குறித்துப் புகாரளித்தன.

மலேசியா, கம்போடியா, வியட்னாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் சூரியசக்தித் தகடுகளைத் தயாரிக்கும் சீனப் பெருநிறுவனங்கள், சந்தையில் பொருள்களைக் குவிப்பதன் மூலம் உலகளாவிய நிலையில் விலை வீழ்ச்சியை ஏற்படுத்துவதாக சூரியசக்தித் தகடு உற்பத்தி வர்த்தகக் குழுவுக்கான அமெரிக்கக் கூட்டணி எனும் குழுமம் கூறியது.எனவே, அமெரிக்க அதிகாரிகள் புதிய வரியை அறிவித்துள்ளனர்.

நவம்பர் 29ஆம் திகதி அமெரிக்க வர்த்தக அமைச்சின் இணையத்தளத்தில் இதுகுறித்துப் பதிவிடப்பட்டுள்ள. அதன் அடிப்படையில், மலேசியா, கம்போடியா, வியட்னாம், தாய்லாந்து ஆகியவற்றிலிருந்து இறக்குமதியாகும் சூரியசக்தித் தகடுகளுக்கு 21.31சதவீதம் முதல் 271.2 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நிறுவனத்துக்கு நிறுவனம் இந்த வரி விகிதம் மாறுபடும்.

எடுத்துக்காட்டாக, ‘ஜின்கோ சோலார்’ நிறுவனம் மலேசியாவில் தயாரிக்கும் பொருள்களுக்கு 21.31 சதவீதம் வரியும் வியட்னாமில் தயாரிக்கும் பொருள்களுக்கு 56.51 சதவீதம் வரியும் செலுத்த வேண்டியிருக்கும்.

சீன நிறுவனமான ‘டிரினா சோலார்’ தாய்லாந்தில் தயாரிக்கும் சூரியசக்தித் தகடுகளுக்கு 77.85 சதவீதம் வரியும் வியட்னாமில் தயாரிப்பவற்றுக்கு 54.56 சதவீதம் வரியும் செலுத்த வேண்டும்.ஆனால், ‘ஹன்வா கியூசெல்ஸ்’ நிறுவனம் மலேசியாவில் தயாரிக்கும் பொருள்களுக்கு எவ்வித வரியும் விதிக்கப்படவில்லை.‘ஜின்கோ சோலார்’, ‘டிரினா சோலார்’ நிறுவனங்கள் இதுகுறித்து உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.

அமெரிக்காவில் பொருத்தப்பட்டுள்ள சூரியசக்தித் தகடுகளில் பெரும்பாலானவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அவற்றில் கிட்டத்தட்ட 80 சதவீதம், மலேசியா, கம்போடியா, வியட்னாம், தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்