ஜஸ்ட்டின் ட்ரூடோ – டிரம்ப் திடீர் சந்திப்பு – பேசப்பட்டது என்ன?
கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கும் டொனால்ட் டிரம்பைச் சந்தித்துள்ளார்.
இரவு உணவாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் இந்த சந்திப்பில் ஆழமாக பேசப்பட்ட விடயங்கள் வெளியாகவில்லை.
எனினும் வர்த்தகம், எல்லைப் பாதுகாப்பு, நேட்டோ, உக்ரைன், சீனா, எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள், திரவ இயற்கை எரிவாயு மற்றும் அடுத்த ஆண்டு ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் G7 உச்சிமாநாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இந்த சந்திப்பு தலைவர்களுக்கு இடையில் பரந்த அளவில் இருந்தது என கூறப்படுகின்றது.
இந்த பயணம் ஒரு சமூக நிகழ்வாகவும் கருதப்பட்டது. ட்ரூடோ மற்றும் அவரது வட்டம் உள்வரும் நிர்வாகத்துடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதற்கும், தகவல்தொடர்பு வழிகளைத் திறப்பதற்கும் ஒரு வாய்ப்பு என்று அமெரிக்க வட்டாரம் தெரிவித்தது.
அண்மையில் மெக்சிகோ மற்றும் கனடியப் பொருட்கள் கள்மீது வரி விதிக்கப்படும் என டிரம்ப் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ புளோரிடா மாநிலத்தில் உள்ள டிரம்ப்பின் Mar-a-Lago இல்லத்துக்குச் சென்றுள்ளார்.
கனடா, மெக்சிக்கோ ஆகியவற்றின் எல்லைகளில் குடியேறிகள், போதைப்பொருள் பிரச்சினை தீராவிட்டால் அவற்றின் அனைத்து பொருட்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண டிரம்பைச் சந்தித்து கலந்துரையாடவிருப்பதாக ட்ரூடோ முன்னதாகக் கூறியிருந்தார்.
கனடாவிலிருந்து சுமார் 80 சதவீத எண்ணெய், 40 சதவீத எரிவாயு அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது.
அவற்றின்மீது வரி விதிப்பது அமெரிக்கப் பயனீட்டாளர்களின் சுமையை அதிகரிக்கலாம் என்று ட்ரூடோ குறிப்பிட்டார்.
அது அமெரிக்க வர்த்தகத்தையும் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, வரிக்குப் பதில் வரிகள் விதிக்கப்படும் என்று மெக்சிக்கோவின் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.