நூற்றுக் கணக்கான சட்டவிரோதக் குடியேறிகளை உஸ்பெகிஸ்தானுக்கு நாடுகடத்தும் அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கிய மத்திய ஆசியக் குடியேறிகள் 131 பேர், உஸ்பெகிஸ்தானுக்கு நாடுகடத்தப்படுவதாக அமெரிக்க உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடுகடத்தப்படுவோர் உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், கஸக்ஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அமைச்சு கூறியது. அவர்கள் புதன்கிழமை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
“எங்களது பரஸ்பர பாதுகாப்பை மேம்படுத்தவும் சட்டத்தை நிலைநாட்டவும் உஸ்பெகிஸ்தானுடன் சேர்ந்து தொடர்ந்து பணியாற்றுவதை எதிர்பார்க்கிறோம்,” என்று உள்துறை அமைச்சர் கிறிஸ்டி நோயம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் மில்லியன்கணக்கான குடியேறிகளை நாடுகடத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
மேற்கு அரைக்கோளத்தில் உள்ள மூன்றாம் உலக நாடுகளுக்குக் குடியேறிகளை நாடுகடத்த டிரம்ப் நிர்வாகம் புதிய பயணப் பாதைகளை அமைத்துள்ளது. அண்மையில் ஈராக் நாட்டவர் ஒருவரை ருவாண்டாவுக்கு அது அனுப்பியது.