அமெரிக்கா–ரஷ்யா மோதல் தீவிரம் – இடையில் சிக்கிய இந்தியா

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றம் நாளுக்குநாள் மோசமடையும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் ரஷ்யா எல்லைக்கு அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா, மூன்றாம் உலகப் போர் விஸ்வரூபம் எடுக்குமா என்ற உலகளாவிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதலின் மையத்தில் இந்தியா சிக்கியுள்ளது. தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவத் தளவாடங்களை வாங்கி வந்த இந்தியாவை, அமெரிக்கா 25% கூடுதல் இறக்குமதி வரி மற்றும் அபராதங்கள் மூலம் அழுத்துகிறது.
இந்தியாவும், ரஷ்யாவும் “நேர்மறையான நிலையான உறவுகள்” என்று தெரிவிக்க, அமெரிக்காவுடனான உறவுகளும் “வலுவான ஜனநாயகத் தொடர்புகள்” எனவும் விளக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு, விவசாயம் மற்றும் பால் பண்ணைச் சந்தைகளை திறக்க மறுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் வரி நடவடிக்கையால் பெரும் பாதிப்பு ஏற்படாது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரு அணு வல்லரசுகளின் வார்த்தைப் போர், தவறான கணிப்புகள் அல்லது சிதறல் நடவடிக்கைகளால் தீவிர மோதலாக மாறும் அபாயம் உள்ளது என புவிசார் அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.